உதடுகளின் அசைவைக் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம்

உதடுகளின் அசைவை வைத்து ஒருவர் பேசுவதை என்ன பேசுகிறார் என அறியும் தொழில்நுட்பத்தினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தினால் (University of East Anglia) உருவாக்கப்பட்ட இப்புதிய உதடு வாசிப்பு தொழில்நுட்பம் குற்றங்கள் தீர்க்க உதவியாகவும், ஒரு சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்வதற்கும்  பயன்படும்.

மற்றும் கேட்பதிலும் பேசுவதிலும் குறைபாடுள்ள நபர்களுக்கு தொடர்பு உதவி வழங்க இத்தொழிநுட்பம் பயன்படும். குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் இது பிரபலங்களின் கதைகளை தேடி வெளியிடும் ஊடகவியலாளர்களாலும் கூட பயன்படுத்தப்படலாம் என அவர்கள் கருத்து வெளியிட்டனர்.

Add Comment