செம்சுங் நிறுவனமானது கெலக்ஸி ரவுண்ட் என்ற வளைந்த திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை அண்மையில் வெளியிட்டது.
அது வெளியாகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில் எல்.ஜி. வெளியிடப்போவதாக கூறப்படும் வளைந்த ஸ்மார்ட் போனின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.
என்கெஜட் இணையத்தளமே இப்படங்களை வெளியிட்டுள்ளது.
படங்களை பார்க்கும் போது செம்சுங் ரவுண்ட்டை விட வளைந்த நிலையில் எல்.ஜி.யினுடையது எனக் கூறப்படும் ஸ்மார்ட் போன் உள்ளது.
மேலும் கெலக்ஸி ரவுண்டை விட தடிப்பம் குறைந்ததாகவும் இது உள்ளது.
இது அடுத்தமாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் இதன் திரை 6 அங்குலமாக காணப்படுவதுடன் இது வளையக்கூடிய பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.








