எக்ஸ்பீரியா Z அல்ட்ரா-டப்லெட் ஸ்மார்ட் போன்

எக்ஸ்பீரியா Z அல்ட்ரா என்ற ஸ்மர்ட் போனை சொனி அறிமுகப்படுத்தியுள்ளது. இது 6.4 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

செம்சுங்கின் கெலக்ஸி நோட் போன்ற டப்லெட் என்றழைக்கப்படும் ஸ்மார்ட் போன்களை விட பெரிய திரையைக் கொண்ட சாதனமொன்றை சொனி வெளியிடப்போவதாக நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

386647-sony-xperia-z-ultra

கறுப்பு, வெள்ளை, ஊதா என மூன்று நிறங்களில் இது சந்தைக்கு வரவுள்ளது.

2.2GHz quad-core Qualcomm Snapdragon 800 புரசசர், 2 ஜி.பி. ரெம், 64 ஜி.பி. வரை அதிகரிக்கக்கூடிய 16. ஜி.பி. உள்ளக நினைவக வசதியையும் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா கொண்டுள்ளது.

இதன் 6.4 அங்கு திரை 1080×1920 பிக்ஸல் துள்ளியமானதுடன் சொனியின் புத்தம் புதிய Triluminos தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பமானது அதிக துள்ளியமானதும், வர்ணங்களை இயற்கையாக காட்சிப்படுத்தக்கூடியதுமென சொனி தெரிவிக்கின்றது

இது தவிர 8 மெகா பிக்ஸல் கெமரா, 2 மெகா பிக்ஸல் பின் கெமரா ஆகியனவற்றையும் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா கொண்டுள்ளது.

 

xperia-z-ultra1-590x330

இதுவும் சொனியின் Xperia z ஐப் போல நீர் மற்றும் தூசியினால் பாதிப்படையாது. இதனூடாக நீருக்கு அடியிலும் படங்களை எடுக்க முடியுமென்பது மேலதிக சிறப்பு.

இவ்வருடத்தின் இறுதிக்காலாண்டுப் பகுதியில் இது சந்தைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

Sony-Xperia-Z-Ultra-black-side

Add Comment