ஏன் டாக்டர்,என் முகத்துக்கு முன்னாடி என் மனைவியோட போட்டோவை காட்டுறீங்க?
இதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட்!
**************************
பக்கத்து வீட்டுக்காரி: உன் மாமியாரை 6 பேரு சேர்ந்து அடிச்சுகிட்டிருக்காங்க, நீ என்ன வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கே? போய் உதவி ஏதும் செய்யலையா?
மருமகள்: ஏற்கனவே 6 பேரு இருக்காங்க, என்னோட உதவி அவங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்!
பக்கத்துவீட்டுக்காரி: ????????????????
**************************
வீட்டு ஓனர் : காலிங்பெல் ரிப்பேர் பார்க்க பலமுறை சொல்லியும் ஏன் வரல?
காமடியன் : நான் பலமுறை வந்து காலிங்பெல் அடிச்சும் நீங்க கதவு திறக்கலயே சார்!!
**************************
மனைவி: இன்னைக்கு சன்டே. வாங்க வெளிய போயிட்டு வரலாம். நான் தான் காரை ஓட்டுவேன். சரியா?
கணவன்: அதாவது கார்ல போயிட்டு ஆம்புலன்ஸ்ல திரும்பி வரலாம்னு சொல்றியா?
**************************
மூன்று பேர் இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலிஸ்காரர் ஒருவர் வண்டியை வழி மறித்தார். அதற்கு வண்டியில் இருந்த நம்மவர்,
“ஏற்கனவே நாங்க மூணுபேர் போயிக்கிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற லிஃப்டு கேக்குறீங்களே!”
**************************
போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
காமடியன் : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?
**************************
[box] உங்களுடைய ஆக்கங்கள், கருத்துக்கள் இத்தளத்தில் இடம்பெற விரும்பினால் எம்மை info@oruthuli.com என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளவும்.[/box]






