வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே )
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் (வெண்ணிலவே )
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே… பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே )
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே …பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
**********************************

இந்த பாடலில் பாடலின் வரிகள் மிகவும் என்னை கவர்ந்துள்ளது. பெரிய கவித்துவமான வரிகள் எதுவும் இல்லாமல், மனதை கவரும்படி இயல்பான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து அத்தோடு ரகுமான் தனது இசையால் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

One Response

  1. Izhan 25/04/2013

Add Comment