தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகை அதிகரித்து வரும் வேளையில் அதில் புதிய, புதிய தொழிநுட்பங்களும், வசதிகளும், பயன்பாடுகளும் அறிமுகமாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்களின் வருகையால் ஆப்பிள் ஐஃபோன் (Apple iPhone) விற்பனை சமீபத்தில் வரலாறு காணாத சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் (technology exhibition) வளையும் தன்மைகொண்ட ஸ்மார்ட்போன்(foldable smartphone) கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வளையும் ஸ்மார்ட்போன் (foldable smartphone) பற்றிய வீடியோவும் இணையத்தில் பிரபலமாக வலம் வருகின்றது.






