வை-பை(Wi-Fi) இணைய இணைப்பை வழங்கக்கூடிய மின்குமிழ் ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இம் மின்குமிழில் மைக்ரோ சிப்(microchip) ஒன்றை விஞ்ஞானிகள் பொறுத்தியுள்ளதுடன் இது செக்கனுக்கு 150mb/s மெகாபைட் வேகத்தில் வை-பை(Wi-Fi) இணைப்பை வழங்கக்கூடியது.
இதற்காக விசேட எல்.இ.டி.(LED) மின்குமிழ் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச் (shanghai institute of technical physics of the Chinese academy of Sciences) சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை தயாரித்துள்ளனர்.
இத்தொழிநுட்பத்துக்கு லை-பை(Li-Fi) எனப் பெயரிட்டுள்ளனர்.
மேற்படி மின்குமிழ் வழங்கும் வை-பை(Wi-Fi) மூலம் குறைந்தது நான்கு கணினிகள் வரை இணைய இணைப்பை பெறமுடியும்.

Li-Fi மின்குமிழ் வழங்கும் வை-பை(Wi-Fi) மூலம் குறைந்தது நான்கு கணினிகள் வரை இணைய இணைப்பை பெறமுடியும்.
இக் கண்டுபிடிப்பின் மூலமாக வானொலி அலைவரிசைகள் மட்டுமன்றி ஒளியும் வை-பை(Wi-Fi) கடத்தியாக செயற்படுவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இது சீனாவில் பொதுவாக பாவனையில் உள்ள அகண்ட அலைவரிசை ( Broad Band) இணைய இணைப்பை விட வேகம் கூடியதென தெரிவிக்கப்படுகிறது.
இந்த மின்குமிழின் பத்து மாதிரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ந் திகதி 2013 அன்று ஷாங்காய்(shanghai) இல் நடைபெறும் “சீனாவின் சர்வதேச தொழில் கண்காட்சி” காட்சியில் வைக்கப்படவுள்ளது.






