பேஸ்புக்கின் புதிய வசதி போட்டோவுடன் கூடிய கமெண்ட்ஸ்

பேஸ்புக்கில்(Facebook) ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு(status) கமெண்ட்(comment) போடுவதென்றால் பலருக்கு விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா?

ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும்.

இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஆனால் மொபைல் அப்ளிகேஷனில் கமெண்டுடன் கூடிய படத்தைப் பாவனையாளர்கள் பார்க்கமுடியும்.

இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அண்மையில் பேஸ்புக் ஹேஸ்டெக் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும்

பல புதிய வசதிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் அண்மையில் அறிவித்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இதனைக் கருதலாம்.

Add Comment