வழக்கமாக நாம் துணிகளை துவைத்து காயவைத்து அயர்ன்(Iron)செய்த பின்னரே அலமாரியில் துணிகளை மடித்து வைப்போம். ஆனால் தற்போது LG அறிமுகப்படுத்தியுள்ள இயந்திரம் சற்றே வித்தியாசமானது. ஏனெனில் இந்த அலமாரியே (Laundry Closet) உங்களது துணிகளை துவைத்து தருகிறது.
இதில் உங்களது துணிகளை பழங்கால நீராவி முறையில் துவைத்து தருகிறது. கூடவே துணிகளின் துர்நாற்றங்களையும் நீக்கும் வகையில் நீராவிகள் தெளிக்கப்படுகின்றன. மற்றும் அலமாரியின் தொடர் அசைவினால் துணிகளின் சுருக்கங்கள் எளிதில் நீக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
ஒரு வெப்ப குழாயின் உதவியுடன் துணிகளின் ஈரம் நீக்கப்பட்டு காற்றினை மறுசுழற்சி செய்து நல்ல நறுமணத்தினை தருகிறது. அனைத்து விதமான துணிகளுக்கும் இது இணக்கமானது. மேலும் வடிநீர் சேமிக்க கொள்கலன்களும் தரப்பட்டுள்ளன. எந்தவித வேதிப்பொருள்களும் சேர்க்கப்படவில்லை.
இது சூடான நீராவி தெளிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுகிறது. மேலும் துவைப்பிகள் மற்றும் டிரையர்களையும் (Dryer) பயன்படுத்தி உள்ளது. இதன் மூலம் துணிகளில் தங்கியிருக்கும் பக்டீரியா(bacteria) போன்ற கிருமிகளை 99.9 சதவிகிதம் நீக்கித்தருகிறது.
துணிதுவைப்பவர்கள் சாதரணமாக பல வேதிப் பொருள்களை சேர்த்து துணியினை விரைவில் மக்கும் நிலைக்கு தள்ளி விடுவர். துவைப்பதென்று சொன்னாலே நீர் மற்றும் டிடர்ஜென்ட் தான் நம் ஞாபகத்திற்கு வரும். இவையிரண்டையும் பயன்படுத்தாமல் துணிகளை வெளுக்கும் LG யின் முறை மிகவும் சிறந்ததே!! இதனால் துவைப்பதற்காக வீணடிக்கப்டும் நீரின் அளவு கணிசமாக குறைக்கப்படலாம்.
உங்களது துணியினை தானாகாவே உலரவைத்து நறுமணத்தினை பரப்பும் இந்த அலமாரியின் விலை $2,000 ஆகும். மிகப்பெரிய ஹோட்டல்கள் மற்றும் விமான வளாகங்கள் அல்லது அலுவலகங்கள் போன்றவற்றில் இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வளர்ந்துவரும் இந்த நவீன யுகத்தில் துணிகளை துவைத்து காயவைத்து மடித்து வைக்க நேரமில்லாதவர்களுக்கு இது நேரத்தை மிச்சபடுத்தும் ஒரு புரட்சிகரமான சாதனமாக அமையும்.







