இணையத்தை விட்டு வைக்காத பற்தூரிகை

அமெரிக்க நெவாடா மாநிலத்தின் லாஸ் வெகாஸ் நகரில் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இணையத்தளத்துடன் தொடர்பைக் கொண்ட உலகின் முதலாவது பற்தூரிகை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த கொலிபிறி பற்தூரிகையிலுள்ள உணர் கலங்கள் பற்களை துலக்கும் போது பற்களிலுள்ள கனியுப்புப் படிமங்கள் எந்தளவுக்கு அகற்றப்படுகின்றன என்பதை கணிப்பிடுகின்றன.
இணையத்தை விட்டு வைக்காத பற்தூரிகை
இந்த பற்தூரிகையானது கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் கணினிக்கு தகவல்களை அனுப்புகிறது.

இணையம் இன்று வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது அப்படியிருக்கும்போது இந்த அமெரிக்கர்கள் இணையத்தை விட்டு வைக்காத பற்தூரிகை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அப்ப பாருங்களன் இணையம் எப்படி எல்லாம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகிறது!

இந்த பற்தூரிகையானது கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் கணினிக்கு தகவல்களை அனுப்புகிறது.

 

tooth brush

Add Comment