ஜூலை மாதம் கோடை காலத்தின் நிறைவனான மாதமாக கருதப்படுகிறது. இது புனிதமான தட்சிணாய காலம் துவங்கும் மாதமாக கருதப்படுகிறது. அதனால் இந்த மாதம் உலகியல் இன்பங்களை தவிர்த்து, ஆன்மிகத்தில் ஈடுபடுவதற்காகவும், விரதம் போன்ற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதற்கான மாதமாக கருதப்படுகிறது.
ஆங்கில நாட்காட்டியில் ஏழாவது மாதமாக வருவது ஜூலை மாதமாகும். ரோமானிய ராணுவ தளபதி” ஜூலியஸ் சீசரை” கெளரவிக்கும் விதமாக அவர் பிறந்த மாதத்திற்கு ஜூலை என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு முன் “குவிண்டிலிசு” என அழைக்கப்பட்டது. வெயில், குளிர், காற்று என அனைத்தும் சம அளவில் இருக்கும் மாதமாக ஜூலை மாதம் விளங்குகிறது. ஆன்மிக மாதம் என்றும், சக்தி மாதம் என்றும் போற்றப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் என்னென்ன உற்சவங்கள் கொண்டாடப்பட உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
ஜூலை 2025 விசேஷங்கள் :
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | விசேஷங்கள் |
| ஜூலை 02 | ஆனி 18 | புதன் | ஆனி உத்திர திருமஞ்சனம் |
| ஜூலை 06 | ஆனி 22 | ஞாயிறு | மொஹரம் பண்டிகை |
| ஜூலை 24 | ஆடி 08 | வியாழன் | ஆடி அமாவாசை |
| ஜூலை 28 | ஆடி 12 | திங்கள் | ஆடிப்பூரம், நாக சதுர்த்தி |
| ஜூலை 29 | ஆடி 13 | செவ்வாய் | கருட பஞ்சமி, நாக பஞ்சமி |
ஜூலை 2025 விரத நாட்கள் :
| விரதங்கள் | ஆங்கில தேதி | கிழமை | தமிழ் தேதி |
| அமாவாசை | ஜூலை 24 | வியாழன் | ஆடி 08 |
| பெளர்ணமி | ஜூலை 10 | வியாழன் | ஆனி 26 |
| கிருத்திகை | ஜூலை 20 | ஞாயிறு | ஆடி 04 |
| திருவோணம் | ஜூலை 12 | சனி | ஆனி 28 |
| ஏகாதசி | ஜூலை 06 ஜூலை 21 | ஞாயிறு திங்கள் | ஆனி 22, ஆடி 05 |
| சஷ்டி | ஜூலை 1 ஜூலை 16 ஜூலை 30 | செவ்வாய் புதன் புதன் | ஆனி 17 ஆனி 32 ஆடி 14 |
| சங்கடஹர சதுர்த்தி | ஜூலை 14 | திங்கள் | ஆனி 30 |
| சிவராத்திரி | ஜூலை 23 | புதன் | ஆடி 07 |
| பிரதோஷம் | ஜூலை 08 ஜூலை 22 | செவ்வாய் செவ்வாய் | ஆனி 24 ஆடி 06 |
| சதுர்த்தி | ஜூலை 28 | திங்கள் | ஆடி 12 |
ஜூலை 2025 சுப முகூர்த்த நாட்கள் :
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | முகூர்த்தம் |
| ஜூலை 02 | ஆனி 18 | புதன் | வளர்பிறை முகூர்த்தம் |
| ஜூலை 07 | ஆனி 23 | திங்கள் | வளர்பிறை முகூர்த்தம் |
| ஜூலை 13 | ஆனி 29 | ஞாயிறு | தேய்பிறை முகூர்த்தம் |
| ஜூலை 14 | ஆனி 30 | திங்கள் | தேய்பிறை முகூர்த்தம் |
| ஜூலை 16 | ஆனி 32 | புதன் | தேய்பிறை முகூர்த்தம் |
ஜூலை 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
| திதி | ஆங்கில தேதி | கிழமை | தமிழ் தேதி |
| அஷ்டமி | ஜூலை 02 ஜூலை 17 | புதன் வியாழன் | ஆனி 18 ஆடி 01 |
| நவமி | ஜூலை 03 ஜூலை 18 | வியாழன் வெள்ளி | ஆனி 19 ஆடி 02 |
| கரி நாட்கள் | ஜூலை 18 ஜூலை 26 | வெள்ளி சனி | ஆடி 02 ஆடி 10 |
ஜூலை 2025 வாஸ்து முகூர்த்த நாள், நேரம் :
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | முகூர்த்த நேரம் |
| ஜூலை 27 | ஆடி 11 | ஞாயிறு | காலை 07.44 முதல் 08.20 வரை |






