கடவுளுக்காக விரதம் இருபவர்களும், உடல் எடையை குறைக்க விரதம் இருப்பவர்களும் பட்டினி இருந்தாலோ, குறைவாக சாப்பிட்டாலோ அது சாத்தியமாகும் என்று நினைக்கிறார்களே தவிர, கலோரி குறைவான உணவை உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.
விரதம் என்பது வெறுமனே சாப்பாட்டைத் தவிர்க்கும் விடயம் மட்டுமல்ல. வயிரோடு சேர்த்து மன உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுப்பதுதான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம் என்று சொல்லி வெளி வேலைகளை வைத்துக்கொண்டு அலைவதும், தொலைக்காட்சி பார்ப்பதும் மிகவும் தவறானது. அது எதிர்மறையான பலன்களைத்தான் தரும் விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரைக் கலந்தாலோசித்து, உடல் நலத்தைப் பரிசோதித்த பிறகும், எப்படி விரதமிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டும் ஆரம்பிப்பதே சரியானது.
வாரத்தில் 6 நாட்கள் நினைத்தபடி உணவு உண்கின்றோம். ஒரு நாள் சாப்பிடாமல் ஒட்டு மொத்த இயக்கத்துக்கும் ஓய்வு கொடுப்பதால் விரதம் என்பது ரொம்ப நல்ல விடயம். உடம்பில் உள்ள கழிவுகள், நச்சுப் பொருள்கள் வெளியேற இது உதவும். ஹெச்.டி.எல்.னு நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும் யார் விரதம் இருக்கலாம், யாருக்கு அது கூடாதென்று சில வரையறைகள் இருக்கு. அதன்படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இரத்த சோகையாலோ, ரத்த அழுத்தத்தாலயோ, நீரிழிவாலயோ பாதிக்கப்பட்டவர்களுக்கு விரதம் கூடவே கூடாது”
விரதம் என்றால் காலை முதல் இரவு வரை உணவை உட்கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தமில்லை. இரவு முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருபதனால் காலையில் எனர்ஜி அளவு குறைவாக இருக்கும். காலைலயே எதுவும் சாப்பிடாமல் விரதத்தை தொடங்கும் பொழுது அந்த எனர்ஜி இன்னும் குறையும். முதலே வேறு சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதனால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகலாம். விரதமிருப்பதென்று முடிவு செய்பவர்கள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து, மறுநாள் காலையில் அதைத் தவிர்ப்பதை தான் (பிரேக்கிங் தி ஃபாஸ்ட்) பிரேக்ஃபாஸ்ட் என்று சொல்கின்றோம், ஆனால் காலையும் மதியமும் சாபிடாமல் இருக்கும்போது இரவு வழக்கத்தைவிட நம்மையும் அறியாமலேயே அதிகம் சாப்பிடுவோம். எடையைக் குறைக்க விரதம் இருப்பவர்களுக்கு இது நேரெதிராக வேலை செய்து, உடல் எடையைக் கூட்டும்.
விரதத்தை முடிக்கிற போது, நாள் முழுக்க பட்டினி, இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, விருந்து மாதிரி ஒரு பிடி பிடிப்பதும் மிகவும் தவறான முறையாகும். முதலில் கொஞ்சம் ஏதாவது உணவு, கூடவே கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கொண்டு பின் வழக்கம் போலச் சாப்பிடலாம்.
தினசரி பயன்படுத்தும் டூ வீலரோ, காரோ… மக்கர் பண்ணாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித்தான். இயக்கத்தை சுத்தம் செய்து, அதற்கு ஓய்வும் கொடுக்கும் அற்புதமான விஷயமே விரதம். மேற்கூறிய தகவல்களை நினைவில் கொண்டு அதைத் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!






