செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது,
வேகமாக ஓடுவதால் என்ன பலன்?
************
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
************
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும், முட்கள் அல்ல
************
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
************
என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன்.
என் தவறை மற்றவர்களிடம் தயங்காமல் கூறுபவன் துரோகி.
************
நன்றாக பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும், சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்!
************
தோல்வியும் துன்பமும் தனியே வருவதில்லை. கூடவே வலிமையையும் அழைத்து வருகிறது
************
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது………”நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று”!
************
வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலதான்…தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்…அருகில் சென்று பாருங்கள், அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்…!
************
கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும்
ஒரு சில நிஜங்களுடன்
நாம் வாழ்கிற நிஜத்துக்கு பெயர்தான் வாழ்க்கை
************
வாழ்க்கை பிடிக்கவில்லை
என வெறுத்து விடாதீர்கள்
வாழும் வாழ்க்கைக்கு
உங்களை விரும்ப கற்றுக் கொடுங்கள்.
************
To read more Tamil quotes just visit to www.quotes.oruthuli.com






