பகவான் ரமண மகரிஷியின் மகா சமாதி (65 ஆவது) தினம் கொண்டாடப்படுகிறது.
தருணாருணமணி கிரணா வலிநிகர்
தருமசரமண மகிழ்மாலை
தெருணாடிய திருவடியார் தெரு மரல்
தெளியப் பரவுதல் பொருளாக
கருணாகர முனி ரமணா ரியனுவ
கையினாற் சொலியது கதியாக
வருணா சலமென வகமே யறிவொடு
மாழ்வார் சிவனுலகாள்வாரே

பகவான் ரமண மகரிஷி முதல் தடவை தெய்வீக திருவண்ணாமலைக்கு வந்த பொழுது வெளியுலகின் நினைவின்றி எப்பொழுதும் உள்ளே மூழ்கியிருந்தார். சாப்பிட்டோமா தூங்கினோமா இங்கே அங்கே சென்றோமா என்ற எந்தவித உணர்வுமின்றி இருந்தார். இப்படியே வாழ்க்கை இருந்தது, இப்படியே சிலகாலம் கழிகின்றது. பகவானுடைய நோக்கம். அவருக்கு இருந்த ஒரே வேலை திருவண்ணாமலை சாரலில் அங்கும் இங்கும் நடந்து திரிவது. பகவானுடைய கால்படாத இடமே திருவண்ணாமலையில் இல்லை என்னுமளவிற்கு திருவண்ணாமலையில் அருள் குகைகள், புனித தீர்த்தக் குளங்கள், நதிகள், காடுகள், இறை கற்கள் என்று எங்குமே பாதம் பட்டது.
பகவானுக்கு ஏதோ ஒரு உணர்வு தோன்றுகின்றது. இவ் உடலை விட்டு விடுவோமோ என்ற வண்ணம் திருவண்ணாமலை சாரலில் நடந்து கொண்டிருக்கின்றார். திடீரென்று எதிர்பாராத விதமாக மாட்டு வண்டி வருகின்றது. அதில் பயணம் செய்த வேறு ஆஸ்ரமத்தை சேர்ந்த சீடர்கள் பகவானிடம் ஓடி வந்து இன்று பகவான் தங்கள் ஆஸ்ரமத்துக்கு வர வேண்டுமென பணிவாக வேண்டிக்கொள்கின்றார்கள். பகவானுக்கு செல்ல வேண்டுமென்று விருப்பமில்லை.
ஆனால் சீடர்களோ பகவானை அன்போடு அணைத்து தூக்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு தங்களது ஆஸ்ரமத்தை அடைகின்றார்கள். அங்கே பகவானுக்கு திருவமுது படைத்து மகிழ்கின்றார்கள் . இதன் பிரகாரம். பகவானுடைய சாமதியடைய வேண்டு என்ற எண்ணம் இளமைக்காலத்தில் தடைப்படுகின்றது. திருவண்ணாமலையாரின் அருள் நோக்கம் நிறைவேறுகின்றது. அதாவது பகவானைத் தொடர்ந்து ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் அண்ணாமலையில் இருத்தி ஒரு ஞானியானவர் எப்படி இருப்பார் என்று உலகுக்கு அண்ணாமலையார் காட்டியருளினார். எமக்கும் பகவான் ரமணரிஷியின் ‘நான் யார்?’ என்கின்ற அதிசுட்சும உபதேசமும் கிடைத்தது. ரமண மகரிஷியின் பெருமையையும் இவ் உலகு உணர்ந்து ஞானத்தை தேடி பகவான் ரமண மகரிசியை சரணடைந்த மேஜர் சட்விக், கோஹன், ரமணகிரி (அலெக்சாண்டர்) போன்ற வெளிநாட்டு அன்பர்களுக்கும் உள்நாட்டு அடியார்களுக்கும் பறவைகள் விலங்குகளுக்கும் முத்திப்பேறு அளித்தார். இவர்களுடைய சமாதிகளை நாம் ஸ்ரீ ரமணாசிரமத்தில் காணலாம்.
பகவானின் மகாசமாதி
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி 14.04.1950 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.47க்கு மகாசமாதி அடைந்தார் . பிரெஞ்சு போட்டோ கிராபர் கார்டியர் ப்ரேசான் கூறியது அன்றிரவு மிகவும் பிரகாசமான பேரொளி போன்ற வாழ் நட்சத்திரம் ஒன்று தெற்கு பக்கத்தில் இருந்து மெதுவாக ஆகாயத்தை கடந்து அருணாசல உச்சிக்கு சென்று அருணாசல சோதியோடு இரண்டறக்கலந்தது . இதனை இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள பலர் பார்த்து பரவசமடைந்தார்கள். திருவண்ணாமலை செல்வோம் கிரிவலம் வருவோம். அண்ணாமலையார் அருள் பெறுவோம்.
அருணாசலமென அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா – பகவான் ரமணமகரிஷி
திருமதி பிரியா தவராஜா
ரமண மகரிஷி பீடம், கொழும்பு






