ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

21ஆம் நூற்றாண்டின் மூத்தப்பிள்ளை “சோம்பேறித்தனம்”. நமது இந்த சோம்பேறித்தனம் தான், இன்று சந்தையில் விற்கப்படும் உடனடி (இன்ஸ்டனட்) உணவுப் பொருட்களின் பிறப்பிற்கு முதன்மை காரணம்.

இது, போதாமல் நாலு நாளைக்கு சேர்த்து சமைத்து ஃபிரிஜில் வைத்துவிடுவோம் அல்லது வாரத்திற்கான காய்கறிகளை மொத்தமாக வாங்கி ஃபிரிஜில் அடைத்து வைத்துவிடுவோம்.

இன்னும் சிலர், ஏற்கனவே பதப்படுத்தி ஃபிரிஜில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி வந்து அவர்கள் வீட்டு ஃபிரிஜில் வைத்து பயன்படுத்திகின்றனர். இது எவ்வளவு கொடியது என்று உங்களுக்கு தெரியுமா? இனி நாம் ஃபிரிஜில் வைக்கக்கூடாத உணவுகள் பற்றிப் பார்க்கலாம்……..

உருளைக்கிழங்கு:-

potatoஃபிரிஜில் உருளைக்கிழங்குகளை வைப்பதால் அதன் சுவை குறைந்துவிடும். இதற்கு மாறாக காகித பைகளில் உருளைக்கிழங்குகளை வைக்கலாம். பிளாஸ்டிக் பைகளில் வைப்பதை முற்றிலுமாக தவிர்கவும். இது விரைவாக காய்கறிகளை அழுகிப்போக செய்துவிடும்.

பழங்கள்:-

fresh_fruit

பழங்களை வெட்டிவைத்த பின்பு ஃபிரிஜில் வைப்பதை தவிர்த்துவிடுங்கள். இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கிருமிகளின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு பதிலாக முழு பழங்களாக வைத்து, தேவையான போது வெட்டி சாப்பிடுங்கள்.

வெங்காயம்:-

onion

வெங்காயங்களை ஃபிரிஜில் வைக்கவேண்டாம், இது ஒரு வகையான துர்நாற்றம் ஏற்பட காரணமாகிவிடும். வெங்காயத்தை காகித பைகளில் வைத்தாலே போதும்.

தக்காளி:-

tomato

தக்காளியை ஃபிரிஜில் வைப்பதனால் அதன் சுவையில் மாற்றம் ஏற்படும். மற்றும் தக்காளிகளை ஃபிரிஜில் வைப்பதனால் அவை சீக்கிரம் பழுத்துவிடும். பழுத்த தக்காளியை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.

கெட்சப் – சாஸ்:-

ketchup

 

கெட்சப் – சாஸ் போன்ற உணவுகள் நீங்கள் ஃபிரிஜில் வைக்க அவசியமே இல்லை. அவை, விரைவில் கெட்டுப்போகும் தன்மையற்ற உணவுகள்.

ஊறுகாய்:-

pickle

ஊறுகாய்களை ஃபிரிஜில் வைக்க வேண்டிய தேவையே இல்லை. அவை வெளியில் வைத்தாலே போதுமானது. நீர் படாமல் மட்டும் பாதுகாத்து வைத்தால் போதும்.

தேன்:-

honey

தேனை ஃபிரிஜில் வைப்பதனால் அது அடர்த்தியாகி அதன் இயற்கையை நிலையை இழந்துவிடும். எனவே, தேனை வெளியில் வைப்பதுதான் நல்லது.

பாண்:-

wheat-bread

பாணை ஃபிரிஜில் வைப்பதனால் அது சீக்கிரமாக காய்ந்துவிடும். இதற்கு மாறாக காற்று புகாத பைகளில் வைத்து பாதுகாத்தாலே போதுமானது.

தர்பூசணி:-

Watermelon WIDE

நீர்சத்து சத்து அதிமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதுமானது. ஒரு வேலை அறுத்துவிட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் ஃபிரிஜில் சாப்பிடுங்கள். அதற்கு மேல் தனது தன்மையை இழந்துவிடும்.

Add Comment