2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான T:20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண T:20 போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள பதின்மூன்று விளையாட்டு அரங்கங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






