இலங்கை அணி, சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) வெளியிட்டுள்ள இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜூலை 27-ம் திகதியன்று பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளிடையே 2 இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெற உள்ளன.
அதற்கு முன்னதாக இன்று இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இலங்கை அணி 134 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 127 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் இருக்கின்றன.
இந்திய அணி 121 புள்ளிகளுடன் தொடர்ந்து 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4வதும், 113 புள்ளிகளுடன் இங்கிலாந்து 5வதும், தென்னாப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 6வதும் இடத்தில் உள்ளன.
மொத்தம் 16 நாடுகளில் ஆப்கானிஸ்தானும் கனடாவும் போதுமான போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் 14 அணிகளைக் கொண்டே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.







