ஆஸ்துமாவை தடுக்கும் மூன்று மூலிகைகள்

குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ஆஸ்துமாவானது குழந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமாவால் உடல் வீக்கம் அடைந்து மெலியும். மேலும்,உடலில் அதிகபடியாக சளியை உற்பத்தி செய்யும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக உடலில் பல உபாதைகள் வரக்கூடும்.

பொதுவாக பெண்கள் ஆஸ்துமாவால் அவதிப்பட்டுக்  கொண்டிருந்தால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கக்கூடும். அதேபோல்தான் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கவும் ஆஸ்துமா #Asthma ஒரு காரணமாக இருக்கின்றது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எவ்வித ஆரோக்கியக்  கேடுகளும் இல்லாத குழந்தைகளை விட உடல் எடை அதிகரித்துக்  காணப்பட்டனர். ஆஸ்துமாவால் உடல் எடை அதிகரிக்க 66 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. மேலும், ஆரோக்கியமான குழந்தைகளை விட ஆஸ்துமா பாதிப்பு இருக்கும் குழந்தைகளிடத்தில் உடல் எடை அதிகரிக்க 50 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்பதனால் அதிகம் விளையாட மாட்டார்கள். இதன் விளைவாக உடலில் கொழுப்பு சேர்ந்துவிடும். மேலும், கடுமையான மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது.

ஆயுர்வேத #Ayurveda  முறைப்படி வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும் மூன்று நிலையில் தான் நம் உடல் வகைப்படுத்தப்படுகிறது. இதில் கபம் அதிகரித்தால் ஆஸ்துமா போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.இந்த மூன்றும் ஒருவரின் உடலில் சமமாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆஸ்துமாவை குணப்படுத்த நுரையீரலில் உள்ள கபத்தை நீக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு ஆயுர்வேத மூலிகைகளை உட்கொண்டால் ஆஸ்துமாவை சரிசெய்யலாம். வசா, புஷ்கர்முலா மற்றும் யாஸ்டிமது போன்ற இயற்கை மூலிகைகள் #Herbs ஆஸ்துமாவை குணப்படுத்தவல்லவை.

#kids #healthy #fatBody #Colds

Add Comment