முகம் சுருக்கமின்றி இளமையோடு இருப்பதற்கான வழிகள்

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். முகம் சுருக்கமின்றி இளமையோடு இருக்கும்..

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.

பாதாமும், ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால், சருமம் பளபளப்பு பெறும்.

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

முகம் பளபளக்க முதலில் பப்பாளி பலத்தை நன்றாக மசித்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

பிறகு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவவும்.அதன் பின்னர் பப்பாளி பேஸ்ட்-யை முகம் முழுவதும் மெதுவாக தடவவும் .

5 – 10 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும் .இம்முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,பொலிவாகவும் இருக்கும்.

மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல் இருப்பதுடன் என்றும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.

Add Comment