இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை என்பது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கும் ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செய்ய பாதிக்கப்பட்ட நாம் எல்லாருமே, நாம் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம் தூக்கமின்மைய போக்க முயற்சி செய்திருப்போம், இல்லையா?

இப்போது, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

  • செர்ரி பழங்கள்:-   

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் எனும் வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.

அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

cherry

 

  • வாழைப்பழம்:-

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம் வாழைப்பழத்துல நிறைய இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கின்றது.

bananas

  • டோஸ்ட்:-

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

tost

 

  • ஓட்ஸ் கஞ்சி:-

மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் இரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சக்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.

Strawberry.Overnight.OatsStrawberry.Overnight.Oats

  • கதகதப்பான பால்:-

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம் மேலே பார்த்த 4 உணவுகளுமே புதிதுதான். ஆனால் பால் மட்டும் பழசுதான். வாழைப்பழத்தில் இருக்கும் எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

milk

 

Tags: , ,

Add Comment