அதிகமான காதல்
சிம்ம இராசிப்  பெண்கள் மிகவும் அதிகமாக காதலிப்பார்கள். நீங்கள் ஒரு மடங்கு எதிர்பார்த்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் மடங்கு எதிரொலிக்கும்.

ஒரே மாதிரி இருக்காது
சிம்ம இராசிப்  பெண்கள் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். தினம் தினம் தீபாவளி போல, இவர்கள் புதிதாய் வாழ விரும்புவார்கள்.

அழகு தேவதைகள்
ஆடை அணிவதிலிருந்து, தாங்கள் செய்யும் சிறு சிறு விடயங்களிலும் அழகாக ஈடுபடுபவர்கள் சிம்ம இராசிப்  பெண்கள்.

திடீர் சுவாரஸ்யங்கள்
திடீர் திடீரென உங்களை ஆச்சரியப்படுத்த சிம்ம இராசிப்  பெண்கள் தவறவே மாட்டார்கள். அது பரிசாக மட்டுமல்லாமல், முத்தங்கள், கட்டிப்பிடி வைத்தியங்கள் மற்றும் நீங்கள் என்றோ எதிர்பார்த்த விஷயங்கள் என எதுவாகக்  கூட இருக்கலாம்.

திட்டமிட்ட வாழ்க்கை
சிம்ம இராசிப்  பெண்களிடம்  தங்களுக்கு என்ன வேண்டும், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல்கள் இருக்கும். எனவே, இவர்கள் குழம்பவும் மாட்டார்கள், உங்களை குழப்பவும் மாட்டார்கள்.

மகிழ்விக்கும் மோகினி
உங்களது மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள். உங்கள் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சியாக கருதும் குணம் கொண்டவர்கள் சிம்ம இராசிப்  பெண்கள்.

அவநம்பிக்கை
இவர்களுக்கு அவநம்பிக்கை மிகவும் குறைவாகத்  தான் இருக்கும். மற்றும் யாரையும் சந்தேகப்படமாட்டார்கள். ஆதலால், சிம்ம இராசிப்  பெண்களை காதல் செய்வீர், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.