Corona வும் நாமும்
எத்தனை கொரோனா அலைகள் எத்தனை முறை
எம்மை தாக்க வந்து கொண்டிருந்தாலும்
தன்னம்பிக்கை, திட உறுதி என்பவற்றால்
அதையும் வெற்றி பெற
மனித உள்ளம் அசையாமல் உறுதியாக வைத்திருக்கிறது.
தக்கன பிழைக்கும் தகாதன மடியும் இதுவே தாரக மந்திரம்
*********
வதந்திகளை வாந்திகளா
வெளியேற்றும் சிலர் மத்தியில்
கொரோனா தொற்றி விடுமோ என்ற அச்சம்
அவர்கள் மனதை சொல்லாமல் கொல்லுகிறது
மனிதா எது நடந்தாலும்
மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்
உறுதியான உள்ளத்தில் துரும்பு கூட
நுழைந்து துவம்சம் செய்ய முடியாது
சொற்ப கால ஆயுளில்
சொல்லாமல் வரும் மரண அழைப்பு
இதுவே உலக யதார்த்தம்
*********






