காதலர்கள் தினம்…

வாசகர்கள் அனைவருக்கும் இனிய காதலர்கள் தின வாழ்த்துக்கள்…..!!!

இன்று தத்தம் பிரத்தியேக தருணங்களுக்காக காத்திருக்கும் அனைத்து காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான, மறக்கமுடியாத நாளாக அமைய வாழ்த்துகிறோம்.

ஒரு அன்பான காதல் கிடைத்தால் நகரும் நாட்கள் எல்லாமே காதலர் தினம் தான்.

இன்றைய தினம் மட்டுமேயன்றி கிட்டதட்ட பத்து நாட்கள் முன்பிருந்தே அன்பளிப்பு பொருட்கள் விற்பனையாகும் இடங்களெல்லாம் ஒரே செவ்வண்ணமயம். சிவப்பும் வெள்ளையுமாக அன்பளிப்பு பொருட்கள் “My Love”, ” For My Sweetheart “, ” Be My Valentine” போன்ற வாசங்களோடு வெவ்வேறு வகைகளில் இரண்டு அன்னப்பறவைகள் போல, சோடி டெடி பெயர்களாக, காதல் சோடிகளாக என்று வகைவகையான தோற்றங்களில் கண்ணைக் கவரும் வகையில் தென்படுகின்றன. இதைவிடவும் வாழ்த்து மடல்கள், செந்நிற ரோஜா மொட்டுக்கள், சொக்லேட்டுகள் இப்படி ஏராளம். இவற்றைத் தேர்ந்து வாங்கும்இளவட்டங்களின் தேடல் அவளுக்காக என்றும் அவனுக்காக என்றும் சிந்தனைகளோடு முட்டி மோதி ஒன்றை வாங்கி அதை சுற்றுவதற்கு சுற்றும் தாளையும் தேர்வு செய்து எடுத்துச் செல்லும் அழகே தனி.

வேறும் சில காதலர்கள் திருமணமானவர்கள் உட்பட நகைகள், அணிகலன்கள், இராப்போசனம், ஆடைகள், திரைப்படங்கள்,சுற்றுலாக்கள்,கேக் வகைகள் என்று அவரவருக்கு பிடித்த வகையில் கொண்டாட்டத்திற்கு தயாராகிறார்கள். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்பிருந்ததை விட இப்போது காதலைவெளிப்படுத்துவது என்பது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று சொல்லலாம்.

Text messages , Twitter tweet இப்படி பல பரிமாணங்கள் வாயிலாக வளர்ந்து  in relationship என்று status Facebook இல் போடுவதும் Break up என்று ஏதாவது அழுகிற smiley ஐ
update செய்வதும் காதல் போகும் போக்கு அப்பப்பா….

எது எப்படியோ social media ல போயிட்டிருக்கின்ற நல்ல காதல்களுக்கும் நாம் வாழ்த்து சொல்கிறோம். காதலர்கள் தினம் எல்லாக் காதலர்களுக்கும் வண்ண மயமான வாழ்வைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

Happy Valentine’s Day……

Valentine's greetings

Add Comment