ஆசிரியர் : ஒரு தட்டுல பத்து லட்டு இருக்கு
அதுல ஐந்து லட்டை உனது தம்பியை எடுக்க சொல்கிறேன்
தட்டுல மீதி எவ்வளவு லட்டு இருக்கும்?
மாணவன்: ஒண்ணுமே இருக்காது..
ஆசிரியர் : மக்கு, உனக்கு கணக்கே தெரியல…
மாணவன்: உங்களுக்குத்தான் என் தம்பிய பற்றி தெரியல..
*********************
WIFE : என்னங்க,பக்கத்து வீட்டுல புருசன் பொண்டாட்டிக்குள்ள பயங்கர சண்ட நடந்துச்சுங்க.
HUSBAND : அப்புறம் என்னாச்சு?
WIFE : கடைசில அவரோட பொண்டாட்டி கோவிச்சுகிட்டு,அவ அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.
HUSBAND : ம்ம்ம்…அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்குது.கொடுத்து வச்ச மகராசன்.
*********************
டீச்சர் : ஏன்டா… இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் …
டீச்சர் : விளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர் … முயற்சி பண்ணினேன்… ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை….
டீச்சர் : ஏய்?
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது….
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர் …. குளிக்கலல்ல…. எப்பிடிப் போறது?
டீச்சர் : குளிக்கலையா….ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல….
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?… சோம்பேறி…!! எரும
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் … அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு….
*********************








