பிரிவின் துயர்

என் இமைகளில் எழுதியவன்
இதழ்களை படித்தவன்
இருளிலும் ஒளியானவன்
எனக்குள் வசிக்கும் என்னவன்
எனதாக்கினான் அவனை
தாகங்கள் தீர்த்து
ஏக்கங்கள் கொடுத்தவன்
தாழ்ந்தே சென்று
என் அன்பை ஜெயித்தவன்
இன்னலில் என் கரம்
இருக்கிப் பிடித்தவன்
என்னை விட்டதில்லை
ஒருபோதும் கை
அதனால் தொலையவில்லை
அவன் மீது நம்பிக்கை
என்று எழுததான் ஆசைப்பட்டேன்
உன் பிரிவெனும் முகத்தை காணா வரை…..

பா.க்ரிஷானி

Add Comment