
அழகு சாதனப் பொருட்களின் பயன்பாடு இன்று அதிகரித்து வருகிறது. கிறீம்கள், மஸ்காரா, ஐ லயினர், கொம்பக்ட் பௌடர், ஃபௌன்டேஷன், லிப் பாம், லிப்ஸ்டிக், லிப் க்லொஸ், ஐ ஷடோஸ் போன்றவற்றை பொதுவாக எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். #CosmeticsProducts #CosmetcAllergy #Lipstick #Creams #Foundation
சிலர் வெளிற்றும் (whitening/ bleaching) அடங்கு பொருட்கள் கொண்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை விடவும் விசேட தேவைகளுக்காக ஸீரம் (serum), மற்றும் எசன்ஸ் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துவதுண்டு.
சிலர்அழகு சிகிச்சை வகைகளைக் கையாள்வதன் முலம் தீவிரமான சிரத்தை எடுத்துக் கொள்வதும் உண்டு; இதன் காரணமாக மரணங்கள் சம்பவிப்பதும் உண்டு. ஆகவே நாம் தேர்ந்தெடுக்கும் வாசனைத் திரவியம் (perfume) உட்பட அழகுசாதனப் பொருட்கள் எமது உடலுக்கு ஒத்துவருபவையாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்பதல்ல அத்தோடு இவற்றில் உள்ள எல்லா உள்ளடக்கப் பொருட்களும் எல்லோருக்கும் அலர்ஜியை (ஒவ்வாமை) உருவாக்கும் என்றல்ல. சிலருக்கு ஏதாவது ஒன்று ஒவ்வாமை ஏற்படுத்தலாம்; சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
இவற்றைப் பயன்படுத்தும் போது தோலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவதானமாக இருப்பதோடு தேவையேற்படின் வைத்தியரை அணுகுதல் நலம்.

ஒவ்வாமை ஏற்படுவதை எவ்வாறு அறிந்து கொள்வது?
1. அழகு சாதனப் பொருளைத் பயன்படுத்திய பின் தோலில் சிறுசிறு பருக்கள் போல் ஏற்படும்
2. சிலருக்கு பருக்களுடன் அரிப்பு உணர்வும் ஏற்படக்கூடும்
3. பருக்கள் ஏற்படாது அரிப்பு மட்டும் ஏற்படலாம்
4. முகத்தில், முக்கியமாக மயிர்க்கால்களில் சிதழுடன் கூடிய பருக்கள் ஏற்படலாம்
5. கண்கள் செந்நிறம் அடைதல்
6. கண்ணில் அரிப்பு ஏற்படுதல்
7. கண்களில் ஏதாவது சிறு படலம் போல ஏற்படுதல்
8. மூச்சு எடுத்து விடுவதில் சிரமம், இழுப்பு அல்லது வீசிங் (wheezing) போன்ற உணர்வு
9. தொண்டையில் அடைப்பு போன்ற உணர்வு
10. தொண்டையில் அரிப்புடன் மூச்சு விடுவதில் சிரமம்
11. தோலில் தடிப்பு -hives உருவாதல்; அதாவது தோல் தடித்து, சிவந்து அரிப்பும் ஏற்படுதல்
12. ஆகக்கூடிய ஒவ்வாமை நிலையாக, முகம், கண்ணிமைகள், உதடுகள் வீக்கமடைவதோடு அளவுக்கு அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
இவ்வாறு ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை அணுகுதல் வேண்டும்.
இரசாயனங்கள் மட்டுமன்றி இயற்கையான பொருட்களுமே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். சில பொருட்கள் சாதாரணமாக எந்த தாக்கத்தையும் காட்டாது. வெயிலில் செல்லும் போதே அதனுடைய தன்மையைக் காட்டும்.

ஒவ்வாமையைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
1. கொள்வனவு செய்யும் போது, ஏற்கனவே அதனைப் பயன்படுத்தியவர்களுடைய பரிந்துரை அல்லது இணையத்தில் கிடைக்கும் அந்தந்தப் பொருட்களுக்கான விமர்சனங்கள் என்பவற்றை ஆராய்ந்து கொள்வனவு செய்யலாம்.
2. Patch test, அதாவது சிறிய அளவில் எடுத்து அவற்றை காதின் பின்புறம், கையின் மேற்பாகம், மணிக்கட்டு போன்ற பகுதிகளில் பரவி 24 முதல் 72 மணி நேரம் வரையில் சோதித்து எவ்வித மாற்றமும் இல்லையெனில் கொள்வனவு செய்யலாம்.
3. பயன்படுத்தும் போது ஒவ்வாமையை உணர்ந்தால் அந்தப்பொருளின் பாவனையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. குறைந்த அளவில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் நலம்
5. அழகு நிலையங்களில் சென்று ஃபேசியல் (Facial) போன்ற சிகிச்சைகள் செய்வதாயின் உங்களுக்கு ஒவ்வாத பொருட்களைப்பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
6. உங்கள் சிகிச்சைகளுக்கு எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது உங்கள் உரிமை என்பதை மறவாதீர்கள். எந்தப் பொருட்கள் மட்டும் அல்ல எந்த brand பயன்படுத்துகிறார்கள் , அதன் காலாவதித் திகதி என்ன, அதன் தயாரிப்பு திகதி என்ன
என்பதையெல்லாம் அறிவதற்கு நுகர்வோராகிய உங்களுக்கு உரிமை உள்ளது.
7. மணமகள் அலங்காரங்கள் செய்யும் போது முன்கூட்டியே இதுபற்றி ஒப்பனையாளருடன் கலந்தாலோசித்தல் நல்லது.
8. உங்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கும் நன்மை தரக் கூடும்.
இந்த விடயம் தொடர்பாக உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை எந்த ஒரு நபரையும் பாதிக்காத வகையில் comment box இல் பதிவுகளை
மேற்கொள்ளலாம்.





