அபிநயம் காட்டும் அழகிய பாவை
அரங்கேற்றமாகுதே பரதக்கலை
புவியினில் தோன்றிய புதுமைக்கலை
புலவரும் போற்றிடும் அழகுக் கலை…
கவியினில் வடிப்பதால் அது அழகுக் கலை
அறிவினில் நிறுதியே நீ அதனை படி
மருவியே போகுதே நம் தமிழர் கலை
மறுபடி உயிர்ப்பிக்க அதில் உன்னை தொலை…
இறைவனும் விரும்பும் எழில் நடனம்
எழுந்து நீ ஆடினால் மலரும் வதனம்
பல ரசணைகள் அதிலே வரனும்
புவியில் எங்கும் புதுமை புரியனும்….
பா.க்ரிஷானி








தங்கள் கவி புலமை மென்மேலும் மெருகூற மனதார வாழ்த்துகிறேன்
கலை வளரட்டும்