ஒரு நிகழ்ச்சி ஒன்றில் வேதாத்திரி மகரிஷி இல்லற வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது, அனுசரித்து செல்வது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
அப்போது ஒரு பெண் எழுந்து, “விட்டுக் கொடுத்து போகவேண்டும் என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக்கொடுத்து போக வேண்டும்? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்கு தானே ஆரம்பிக்கிறது” என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகரிஷி பதிலளிக்கையில், ” யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்து போவார்கள். அவர்கள் தான் பொறுமைசாலிகள்” என்றார்.
இப்போது கூறுங்கள், உங்கள் வீட்டில் யார் விட்டுக்கொடுத்துப் போவது?????







