நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்பவர்களின் கவனத்திற்கு…

பெரும்பாலனவர்கள் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் இடுப்பு வலி அல்லது முதுகுத்தண்டுவடத்தில் வலி போன்ற உடல் உபாதைகளிற்கு ஆளாக நேரிடுகிறது.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும் சரியான உடற்பயிற்சி இல்லை என்பதாலும் இடுப்புமூட்டு நரம்பில் பாதிப்பு உண்டாகும். அதன் ஆரம்ப கட்ட அறிகுறியாகவே உங்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது.

இந்த வலியை சியாடிக் (Sciatic Nerve Pain) என்றும் வழங்குகிறார்கள். இடுப்பு மூட்டில் இருக்கும் நரம்பின் பெயர் சியாடிக் (Sciatic). ஆரம்ப அறிகுறியாக கீழ் முதுகுப்பகுதியில் வலி உண்டாகும், அங்கிருந்து மெல்ல முதுகு கழுத்துவரை வலியெடுக்கும். அல்லது சிலருக்கு கீழ்முதுகிலிருந்து முட்டி வரையிலும் கால் வலியெடுக்கும். முதுகுத்தண்டில் இருக்கும் மிக முக்கியமான நரம்பு இது.

back-pain

 

நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் குடலுக்கு அழுத்தம் உண்டாகிறது. இது இடும்புமூட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் சியாட்டிக் (Sciatic) நரம்பினை பாதிக்கிறது.

இதைத் தவிர கட்டி, உள்ளுறுப்புகளில் ஏற்படுகின்ற இரத்தக்கசிவு, முதுகுத்தண்டில் ஏற்படுகின்ற இன்ஃபெக்‌ஷன் (Infection), கர்ப்பம் ஆகியவை இந்த சியாடிக் வலிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆரம்பத்தில் என்ன காரணம் என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கும்.

உட்காரும் இடத்திலும் சிலருக்கு வலி ஏற்படலாம். கால்கள் வலுவிழந்ததாக உணர்வீர்கள், நடப்பதற்கு, ஏன் சிறிது நேரம் நிற்பதற்கே சிரமப்படுவீர்கள்.

இப்போது இந்த வலியைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு ஓரளவுக்கு கிடைத்துவிட்டது அல்லவா? இதை ஆரம்பகட்டத்திலேயே சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்………

ஒத்தடம் :

cloth massage

இடுப்புபகுதிற்கு சூடான நீரில் ஒத்தடம் கொடுத்திடுங்கள். சுத்தமான துணியை எடுத்து அதனை சூடான நீரில் நனைத்தெடுத்து வலியிருக்கும் இடுப்புப்பகுதியில் வைக்கலாம். அந்த துணியில் இருக்கிற சூடு ஆறும் வரை அந்த துணியை அப்படியே வைத்திடுங்கள்.

பின்னர் மீண்டும் சூடான நீரில் நனைத்து இடுப்புப்பகுதியில் வைக்க வேண்டும். சிலர் ஹாட்பேக் பயன்படுத்துகிறார்கள். ஹாட்பேக்கைவிட நேரடியாக சூடான நீரை துணியில் நனைத்து வைப்பதே சிறந்தது.

 

இஞ்சி எண்ணெய் :

gingeressentialoil-2

ஆயுள்வேத மருந்துக் கடைகளில் இஞ்சி எண்ணெய் கிடைக்கும். அவற்றை ஐந்து சொட்டு வரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை கலந்து லேசாக சூடாக்கி வலியிருக்கும் இடத்தில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஏரளமான மருத்துவ குணங்கள் நிரம்பியது இஞ்சி. குறிப்பாக இதில் ஜின்ஜெரோல் (Gingerol) என்ற சத்து இருக்கின்றது. இவை சியாடிக் நரம்புக்கு வலுவூட்டும்.

 

விட்டமின் மற்றும் மினரல்ஸ் (Vitamin & Minerals):

fruit-vegetables-vitamins-minerals

 

அன்றாட உணவுகளில் விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக விட்டமின் பி12, சி மற்றும் டி ஆகியவை அவசியம்.

ஒரு நாளைக்கு ஆயிரம் மில்லி கிராம் மக்னீசியமும் 2000 மில்லிகிராம் கால்சியமும் அவசியமாகும். இவை உங்கள் நரம்புகளை வலுவூட்டும்.

எடுத்தவுடனேயே சத்து மாத்திரைகளுக்கு செல்லாமல் சத்துக்கள் நிரம்பிய காய்கறி மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது தான் சிறந்தது.

 

கற்றாழை :

Aloe gel

 

கற்றாழை ஜெல்லை அப்படியே தடவி மசாஜ் செய்யலாம். அல்லது கற்றாழை ஜூஸ் செய்தும் குடிக்கலாம். இதிலிருக்கக்கூடிய polysaccharides என்ற சத்து வீக்கத்தை குறைக்கும். அதோடு இதிலிருக்கும் எதனாலிக் பொருட்கள் நரம்புக்கு நன்மை கொடுக்கிறது.

 

எலுமிச்சை சாறு :

lemon juice

 

சாதரண தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதை விட சூடான நீரில் எலுமிச்சையை கலந்து குடிப்பது நல்லது.

எலுமிச்சையில் விட்டமின் சி இருக்கிறது. இவை சியாடிக் நரம்புக்கு வலுவூட்டுவதுடன் உடலில் பக்டீரியா அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும். இதைத் தவிர ஆப்பிள் சிடர் வினிகர் (Apple cider vinegar) கலந்த நீரையும் குடிக்கலாம்.

 

Add Comment