ஐபோனில் இருந்து ஆப்பிள் மியூஸிக்கை( apple music) நீக்குவதற்கான வழி இதோ

ஐஓஎஸ்( ios) தளத்தில் இசை விருந்தை அளித்து நம்மை மகிழ்விப்பதில், ஆப்பிள் மியூஸிக்( apple music) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டியல்களில் பல்வேறு விதமான ட்ராக்குகள் அளிக்கப்படுகிறது. எதிர்கால இசையைச் சேவையை அளிப்பதில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் மியூஸிக்கில் அதிகளவிலான ஸ்ட்ரீமிங் சேவைகள் காணப்படுகின்றன.

ஆனால் மூன்று மாதங்களுக்கு இலவசமாக பயனர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சேவை, அதற்குபின் மாதந்தோறும் சந்தா கட்டணத்தைக்(monthly subscription) கட்டினால் மட்டுமே தொடரக் கூடியதாக அமைந்துள்ளது. இவ் சந்தா கட்டணத்தை(monthly subscription) தொடர விரும்பாதவர்களுக்கு அதனை நிறுத்துவதற்கான வழிகாட்டல் கீழே தரப்பட்டுள்ளது.

இந்தச் சேவையை விட்டு முழுமையாக நீங்கள் வெளியேற முடியாது என்றாலும், ஆப்பிள் மியூஸிக்கின் (apple music) பெரும்பாலான அம்சங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற முடியும். இந்த முறையை ஐபோன்(iPhone), ஐபேட் டச்(iPad tuch), ஐபேட் (iPad) மற்றும் மெக் (Mac) ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.

Step 1: உங்கள் ஐபோன், ஐபேட் டச் அல்லது ஐபேட்டில் உள்ள அமைப்புகள் அப்பை (app)திறக்கவும்.

Step 2: மியூஸிக் பிரிவிக்கு செல்லவும்.

Step 3: காட்டப்படும் ஆப்பிள் மியூஸிக்(apple music) சுவிட்ச்சை ஆஃப் செய்யவும்.

 

ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரி ( icloud music library)இயங்கும் வரை, மேற்கூறிய செயல்பாட்டின் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் வைத்திருக்க நினைத்த எந்த பாடல்களும் அகற்றப்படாது. மெக்கில் (Mac)ஆப்பிள் மியூஸிக்கை நீங்கள் மறைக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்.

Step 1: ஐட்யூன்ஸை திறக்கவும்

Step 2: ஐட்யூன்ஸ் மெனுவில் உள்ள விருப்பங்களைத் (preference) தேர்ந்தெடுக்கவும் அல்லது திருத்து -> விருப்பங்கள் (பிசி) தேர்ந்தெடுக்கவும்.

Step 3: ஜெனரல் டேப் கிளிக் செய்து, “ஆப்பிள் மியூஸிக்கை காட்டு” என்ற பெயரிடப்பட்ட பெட்டியை அன்செக் (unchecked)செய்யவும்.

 

நீங்கள் ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரியை(icloud music library) முடக்கினால், உங்கள் சாதனத்தில் உள்ள ஆஃப்லைன் ட்ராக்குகள் மற்றும் ஆப்பிள் மியூஸிக் பாடல்கள் ஆகியவை அகற்றப்படும். மேலும், ஆப்பிள் மியூஸிக்கில் உள்ள ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரியை கூட தனியாக ஆன் / ஆஃப் செய்ய வேண்டியுள்ளது. ஐகிளவுட் மியூஸிக் லைப்ரரியையும் (icloud music library) முடக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்.

Step 1: அமைப்புகளுக்குச் செல்லவும்.

Step 2: மியூஸிக் பிரிவுக்கு செல்லவும்.

Step 3: ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரியை ஆன்செக் செய்து, ஆஃப் நிலைக்கு மாற்றவும். உங்கள் மெக்கில்(mac) விருப்பங்களுக்கு சென்று “ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரி”யை அன்செக் (icloud music unchecked) செய்தும், இதை செய்ய முடியும்.

 

How-to-remove-Apple-Music-iPhone-screenshot-003

Add Comment