8 வயதில் பல்கலைக்கு செல்லும் சிறுவன்

பெல்ஜியத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் உயர் பாடசாலைக் கற்கையை பூர்த்தி செய்து பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளான்.

லோரன்ட் சிமென்ஸ் என்ற மேற்படி சிறுவனின் மதிநுட்ப ஆற்றல் 145 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 18 வயதுடைய இளைஞர்களின் மதிநுட்ப ஆற்றலுக்குச் சமமானதாகும். அவன் ஒன்றரை வயதில் கல்வியை ஆரம்பித்து ஆறரை வருட காலத்தில் உயர் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ட்டின் தந்தை பெல்ஜிய நாட்டவராவார். அவனது தாயார் நெதர்லாந்து பிரஜையாவார். பெல்ஜியத்தின் ஆர்.ரி.பி.எப். வானொலிக்கு லோரன்ட் அளித்த பேட்டியின் போது, தனக்கு மிகவும் பிடித்தமான பாடம் கணிதம் என்று தெரிவித் தான்.

அவன் இரு மாத கால விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவுள்ளான். தான் சத்திரசிகிச்சை நிபுணராகவும் விண்வெளி வீரர் ஒருவராகவும் வருவதற்கு விரும்புவதாகத் தெரிவித்த லோரன்ட் , ஆனால் தற்போது கணினித்துறையில் கற்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினான்.

Belgium 8 years boy parents

இது தொடர்பில் லோரன்ட்டின் தந்தை தெரிவிக்கையில், தனது மகன் தன்னுடன் கல்வி கற்கும் மாணவர்களை விடவும் மிகவும் இளமையாக உள்ளதால் அவர்களுடன் இணைந்து விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் எனினும் அவன் தனது வயதை யொத்த ஏனைய சிறுவர்கள் போன்று பொம்மைகளுடன் விளையாடுவதற்கு விரும் பவில்லை எனவும் கூறினார்.

Add Comment