உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரில் நான்கு தடவைகள் (1930,1938,1982,2006) சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி 1958ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக உலகக் கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது.

இம்முறை உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த பலமான அணியாக இத்தாலியை கருதலாம். 2006ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் அடுத்த இரண்டு உலகக் கிண்ண போட்டிகளிலும் முதல் சுற்றுடன் வெளியேறியது இத்தாலி அணி. நான்கு தடவைகள் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய இத்தாலி அணியானது இரண்டு தடவைகள் இரண்டாம் இடத்தையும் ஒரு தடவை மூன்றாம் இடத்தையும் வெற்றி பெற்ற பலமான அணியாகும்.
கடந்த இரண்டு உலக கிண்ண தொடர்களில் தகுதி பெறாத சுவிடன் அணியானது இம்முறை ரஷ்யாவில் இடம்பெறும் உலகக்கிண்ண தொடருக்கான வாய்ப்பினைப் பெற்ற 29 ஆவது அணியாகும்.






