சிந்திக்க… சிரிக்க!

பில் கிளின்டனும் ஹிலாரி கிளின்டனும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். பெட்ரோல் போடுவதற்கு ஒரு பங்க் சென்ற போது அங்கிருந்த ஒரு நபரை அடையாளம் கண்டு கொண்ட ஹிலாரி, அவரை தனது கணவருக்கு “இவர் ஹென்றி, என்னுடைய கல்லூரித் தோழர்” என அறிமுகம் செய்து வைத்தார்.

திரும்பி வரும்போது பில் கிளின்டன் ”நீ அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், இந்நேரம் ஒரு பெட்ரோல் போடுபவரின் மனைவியாக இருந்திருப்பாய்” எனப் புன்னகையோடு சொல்ல, அதற்கு ஹிலாரி கிளின்டன் சொன்ன பதில்….

”இல்லை நான் அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருப்பார்!”

————————————————-

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”

இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”

அவள் : “இல்லை”

இவன் : “கீதா ?”

அவள் : “இல்லை”

இவன் : “உமா ?”

அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை…!!!

————————————————-

 

Add Comment