தினமும் சாப்பாட்டிற்குப்பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரணசக்தி உண்டாகும், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும், மேலும் வயிற்றில் ஏற்படும் வாய்வுத் தொல்லையும் கட்டுப்படும்.
அதிகளவு இரும்புச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ள வெண்டிக்காய் உண்பதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது.
சிறிய வெங்காயம் நான்கு எடுத்து தோலை உரித்து நன்றாக மென்று சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு குவளை வெந்நீர் குடித்தால் எத்தகைய காய்ச்சலும் நீங்கும்.
மூலநோயால் அவதிப்படுபவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பூண்டு போட்டு வேகவைத்து கடைந்து உணவுடன் சேர்த்து வந்தால் நோய் நீங்கி குணமடைவார்கள்.
அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் உடல் வலிகளும், கைகால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும்.
பச்சை வெங்காயத்தை சிறிதாக வெட்டி தயிரில் போட்டு, இரவு படுக்கமுன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.
சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்து நன்றாக ஊறியபின் குளித்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
இரவில் தூங்காமல் தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்கு படுக்கப்போகும்முன் அரைத்தேக்கரண்டி தேன் கொடுத்தால், நன்றாக தூங்குவார்கள்.
அறுகம்புல் சாற்றை அடிக்கடி பருகிவந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
தினமும் ஒருதுண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும், மலமும் நன்றாக வெளியேறும்.
இரவில் படுக்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயைக் கண் இமைகளில் தடவி வந்தால் கண்கள் கவர்ச்சிகரமாக மாறும்.







