இணையத்தள தேடு பொறியான கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் படம் வருவதால் புதிய சா்ச்சை ஏற்பட்டுள்ளது.
உலகின் பிரபல தேடுதளமாக கூகுள் விளங்குகிறது. இதன் தேடல் மூலம் கிடைக்கும் பதில்களுக்கு பெரிய அளவில் நம்பகத்தன்மை உள்ளது.அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல முரண்பாடான முடிவுகளை தோ்வு செய்து சா்ச்சை நாயகனாக வலம் வருகிறாா்.இந்நிலையில் கூகுளில் முட்டாள் (Idiot ) என்று தேடினால் டிரம்பின் படம் வருவது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் முரண்பாடான செயல்களால் எரிச்சலடைந்த இணையத்தள செயல்பாட்டாளா்கள் இந்த குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.முன்னதாக ரெட்டிட் என்ற இணையத்தளத்தில் இவர்கள் ஒரு குழுவாக இணைந்து முட்டாள் என்ற வாா்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் படத்துடன் இணைக்கும் வேலையை தொடா் ஓட்டெடுப்பு மூலம் உருவாக்கினாா்கள்.
இதனை ஒரு இணைய போராட்டம் என்ற அளவில் அவா்கள் தீவிரத்துடன் நடத்தினாா்கள்.இதன் விளைவாக கூகுள் இந்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு யாா் அந்த வாா்த்தையை தேடினாலும் டிரம்பின் படத்தைக் காட்டுகிறது.தற்போது இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






