யன்னல்களுக்கு கரும்பச்சை, நீலம் போன்ற நிறங்களில் திரைச்சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
நகைகளை பஞ்சில் சுற்றி வைத்தால்
புதுப்பொலிவுடன் இருக்கும்.
எலுமிச்சம்பழம் உலர்ந்துவிட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.
எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைக்க்கூடாது.
நறுக்கிவைத்த வெங்காயத்தில் சிறிது வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
கத்தியை சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறின்றி நினைத்த வடிவில் வெட்டலாம்.
குளிர்சாதனப்பெட்டியை காற்றோட்டம் உள்ள அறையில் தான் வைக்கவேண்டும். குறைந்தளவு பொருட்களை உள்ளே வைப்பதால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்து.








Good information put more