அப்பிளின் துணை நிறுவனம் சீனாவில் அமைக்கப்படுகிறது

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற நிறுவனமாக திகழும் அப்பிள் Apple நிறுவனம் தற்போது புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்காலத்தில் சிறந்த தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நோக்கிலும், மேலும் பல புதிய சாதனங்களை வடிவமைக்கும் நோக்கிலும் இம் முயற்சியில் அந் நிறுவனம் இறங்கியுள்ளது.

இதன்படி ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட துணை நிறுவனம் ஒன்றினை இவ்வருட இறுதிக்குள் சீனாவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.

Apple planning to open a RND office in China

அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Apple going to do their reach from china

Add Comment