குழந்தை ஸ்மார்ட்டாக பிறக்க உதவும் பழக்கங்கள்……

கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் சிசுவின் வளர்ச்சி மட்டுமின்றி, புத்திக் கூர்மையும் அதிகரிக்க உதவுகிறது.

அதனால் தான் கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் நல்லதையே நினைக்க வேண்டும், செய்ய வேண்டும், பேச வேண்டும் என முன்னோர்கள் கூறியிருந்தனர்.

ஏனெனில், கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் இருக்கும் சூழலும், செய்யும் செயல்களும் தான் சிசுவின் எதிர்கால செயல்பாடுகளில் மற்றும் குணாதிசயங்களில் எதிரொலிக்கும். அவ்வாறான சில பழக்கங்களை இப்போது நாம் பார்க்கலாம்…….

இசை

hearing music during pregnency

கர்ப்பக்காலத்தில் மன அழுத்தம் குறைத்து ரிலாக்ஸாக இருக்க இசை உதவுகிறது. கர்ப்பக்காலத்தில் பெண்கள் எப்போதுமே அமைதியான சூழலில் இருக்க வேண்டியது அவசியம். சிசுவின் நல்ல வளர்ச்சிக்கு மெல்லிசை கேட்பது சிறந்தது.

சூரிய ஒளி

உங்கள் மீது சூரிய ஒளிப்படுவது போல காலை இருபது நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சிசுவின் வளர்ச்சிக்கு விட்டமின் டி மிகவும் அவசியமானது. இது, நோய் எதிர்ப்பு மற்றும் எலும்பின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

புத்தகம்

Best-pregnancy-reading

உறங்குவதற்கு முன்னர், நல்ல கருத்துள்ள புத்தகங்களை சில பக்கங்கள் வாசிக்க மறக்க வேண்டாம். இது குழந்தையின் மூளை சக்தியை அதிகரிக்கவல்லது.

ஆரோக்கியமான உணவுமுறை

சமநிலையான டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அனைத்து சத்துக்களும் உங்களுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் தேவை.

உடற்பயிற்சி

exercise during pregnency

பெரும்பாலும் ஆறு, ஏழாவது மாதத்தை தாண்டும் போது பெண்கள் மிகவும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், இந்த காலக்கட்டத்தில் தான் அவர்கள் முடிந்த அளவிற்கு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நடப்பது, உட்கார்ந்து எழுவது போன்றவை பிரசவத்தின் போது அதிக வலி ஏற்படாமல் இருக்க உதவும்.

Add Comment