ஒக்ஸ்போட் அகராதி நிறுவனம் தனதுஅடுத்த பதிப்பில் Mx என்ற வார்த்தையை வெளியிடவுள்ளதாம்.Mx என்றால் என்ன?
திருநங்கைகளுக்கு சர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்துக்கான அங்கிகாரம்அதிகரித்து வருகின்றபோதிலும் பெயருக்கு முன் திரு(Mr), திருமதி (Mrs) என்று அழைப்பதற்கு திருநங்கைகளுக்கு எவ்வித அடையாளமும் இருக்கவில்லை.
அதற்கு பதிலாக விண்ணப்பப்படிவங்களில் வேறு (Other) என்ற சொல்லே குறிப்பிடப்பட்டு வந்தது. ஒக்ஸ்போட் அகராதி நிறுவனம் தனதுஅடுத்த பதிப்பில் Mx என்ற வார்த்தையை வெளியிடவுள்ளதாம்.
கடந்த இரு வருடங்களாக எந்த ஆரவாரமுமின்றி இங்கிலாந்தின் அதிகாரபூர்வ படிவங்களில் திருநங்கைகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டு வந்த Mx என்ற சுருக்கப் பெயரே இவ்வாறுஒக்ஸ்போர்டின் அடுத்த பதிப்பில் வெளியாகவுள்ளது.
இங்கிலாந்தில், வங்கிகள், சில பல்கலைக்கழகங்கள் என்று பல துறைகளும் தற்போது Mx என்ற சிறப்பு பெயரை ஏற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.






