தீண்டாமை
Gowri Venkataswamy
உயிர் எல்லாம் உயிர் தானே – அதில்
தாழ்வென்பதும் மேல் என்பதும் ஏது?
பிறப்பில் தரம் பிரிக்காமல்
படைத்துவிட்டான் இறைவன்
பிரிவினை கொண்டு
பிளவுண்டதோடு நில்லாமல்
படைத்தவனையும் பிரித்துவிட்டான்
பகுத்தறியும் எண்ணம் இருந்தும் மனிதத்தன்மையை இழந்தவன்
நூற்றாண்டுகள் கடந்துவிட்டன
தலைமுறைகளும் மாறிவிட்டன – ஆனால்
தலையும் இல்லாமல் வாழும் இல்லாமல்
எவனோ வளர்த்துவிட்ட தீண்டாமை
இன்றும் கொழுந்துவிட்டு எரியுதடா
மாட மாளிகையில்
சாதி மத சீற்றங்களை கொளுத்திவிட்டு
குளிர்காயும் மனித மிருகங்கள் இருக்கையிலே
சமநிலை என்பது நிஜத்தில் அல்ல
கற்பனையிலும் தோன்றாது
இந்த குடியரசு நாட்டிலே…






