சச்சினின் சாதனைக்கு சவால் விடப்போகிறார் கலிஸ்!

தென் ஆபிரிக்காவின் சகல துறை ஆட்டக்காரரான கலிஸ் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆட ஆரம்பித்தால் பின்னர் அவரை ஆட்டமிழக்கச் செய்வது என்பது எளிதான காரியமல்ல.

இது பள்ளி நாட்களிலிருந்தே அவருடைய இயல்பாக இருந்தது என்று அவருடைய சிறிய வயது பயிற்சியாளரும், வழிகாட்டியுமான கீத் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியர்கள் கூட கலிஸ் விளையாட ஆரம்பித்தால் தனி உலகத்தில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்கள்.

சச்சின் டெண்டுல்கர் 198 போட்டிகளில் (327 இன்னிங்ஸ்) ஆடி 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார் ஆனால் கலிஸ் இதுவரை 162 டெஸ்ட் (274 இன்னிங்ஸ்) போட்டிகளில் ஆடி 13,128 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கலிஸின் ஓட்ட விகித சராசரி 53.86ஆகவும் சச்சினின் சராசரி ஓட்ட விகிதம் 56.10 ஆகவும் உள்ளது.

எனவே, கலிஸ் தொடர்ந்து 327 இன்னிங்ஸ் விளையாடினால், தற்போது அவருக்கு உள்ள ஓட்ட விகிதத்தில் நிச்சயம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சச்சினை விட இரண்டரை வயது சிறியவரும், ஆட்டத்திறன் கொண்டவருமான கலிஸ் கடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் 46 ஓட்ட சராசரியில் 1181 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சச்சின் 31 ஓட்ட சராசரியில் 872ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதனைக் கணக்கிடும்போது, கலிஸின் பயிற்சியாளரான கீத் ரிச்சர்ட்சன். அவர் சச்சினின் சாதனையை முறியடிக்காமல் ஒய்வு பெறமாட்டார் என்று உறுதிபடக் கூறுகின்றார்.

 

south Africa Jacques-kallis

south Africa Jacques-kallis

 

kallis vs sachin

Kallis vs Sachin

 

Add Comment