காகிதமாய் நான் இருந்தேன்
கவிதையாய் நீவந்தாய்………
மௌனமாய் நான் இருந்தேன்
சிறு புன்னகையில்
நீ நுழைந்தாய்…….
வெறும் உடலாய் நான்
இருந்தேன் இன்று என்
உயிராய் வாழ்கின்றாய்…….
தனிமையில் நின்றிருந்தேன்
தாயென மடி சாய்த்தாய்…..
காதலில் இதனை சாத்தியமோ …
இல்லை- இது காதலை தாண்டிய
“எம் உறவு”………..
<<<<மாவைதம்பி>>>.
காதலை சொல்லும் சிற்பங்களை
பார்த்து ரசித்த தருணங்கள்
இன்று நீ என் தோலில் சாயும்
நிபிடங்களில் நினைவில் வருகிறது ……
வரமாய் கேட்கிறேன்
இந்த நிபிடத்தில் நாமும்
அந்த சிற்பமாய் மாறிவிட……
<<<<மாவைதம்பி>>>> —
மௌனங்களால் மறந்து
போகச் சொல்கிறாய் – ஒரு முறை
வார்த்தைகளில் சொல்லிவிடு
நான் இறந்து போகிறேன் .
<<<மாவைதம்பி>>>






