நாய்க்கு மனிதன் என்றும்
மனிதனுக்கு நாய் என்றும்
பெயர் வைத்தாலும்
மிகையாகாது இவ்வுலகில்……
நாயை நாய் என்று
கீழ்த்தரமாய் பேசிவிட்டு
மனிதன் என்ற பெயரோடு
மிருகம் போல் வாழ்கிறது
ஓர் கூட்டம்….
மிருகம் தன் தேவையை தாண்டி
மற்றவறுக்கு இடையூறு தராது
மனிதனோ தேவை தீர்ந்த பின்னும் சுயநலமாய் இருக்கிறான்…
பொருள் தேடி புகழ் தேடி கடைசியில்
ஆரடி நிலத்தினுல் ஐக்கியமாகி விடுகிறான்…..
சுயநலம் தலைவிரித்தாடும் போது
மனிதனிடம் மனிதம் மரித்தே போகிறது….
வாழ்க்கை போட்டிக்குள் நீ ஜெயிப்பவனாயின்…
நன்மை செய் புண்ணியம் சேர்….
தோற்பவனாயின் தீமை செய் பாவம் சேர்…
உன் வாழ்கை உன் கையில்…
பா.க்ரிஷானி






