நீரிலும் பயணிக்கக் கூடிய வகையில், உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் சீனா தயாரித்துள்ள மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
விமான தயாரிப்பிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. கடந்த, 2007இ ல், முதல் சரக்கு விமானத்தை சீனா தயாரித்தது. அது விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு மே மாதம் முதல் பயணியர் விமானத்தை சீனா தயாரித்தது.
இந்நிலையில், நீரிலும் பயணிக்கும் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்துள்ளது. நேற்று நடந்த இதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்தது. 39 மீற்றர் நீளமுள்ள இந்த விமானம், தீயணைப்பு, கடல் பகுதி ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.





