முகப் புத்தகத்தின்(Facebook) தற்போதைய சூடான செய்தி அது அறிமுகப் படுத்தும் Graph Search என்பது. இது இன்னும் முழுமை பெற்ற பதிப்பாக வெளிவரவில்லை. மாறாக Beta பதிப்பாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எல்லோருக்கும் இந்த தேடல் வசதி கிடைக்க காத்திருக்க வேண்டும்.
அதெல்லாம் சரி. அது என்ன Graph Search? முதல்ல ஒரு விசயத்தை சொல்லணும். இது ஒன்றும் கூகிள் மாதிரி இணையத் தேடல் அல்ல. பிறகு? நல்லா கற்பனை பண்ணிப் பாருங்க. முகப் புத்தகத்தில் எத்தனை மில்லயன் கணக்கான தகவல்கள் சேமிக்கப் பட்டிருக்கு. ஆனால் தற்போது முகப் புத்தகத்தில் இருக்கும் தேடுதல் வசதியைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தகவல்கள் மட்டுமே கிடைக்கப் பெறும். அதனால் அவர்கள் அறிமுகப்படுத்தும் இந்த Graph Search ஐ பயன்படுத்தி மிகச் சிறந்த தேடலை மேற்கொள்ளலாம்.
எப்படி எல்லாம் தேடலாம் என்பதற்கு சில உதாரணங்கள்.
நான் விரும்பிய படங்கள் எவை?
நான் இருக்கிற என் நகரத்தில் இருக்கும் நண்பர்கள் யார்?
குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் என் முகப் புத்தக நண்பர்கள் யார்?
பரிஸ் நகருக்கு சென்று வந்த நண்பர்கள் யார்?
கொழும்பில் எடுத்த படங்கள் எவை?
மேலே சொன்னவை எவை சாத்தியம் என்பதற்கான சில உதாரணங்கள். ஆனால் இதன் எல்லை பெரியது என்று முகப் புத்தகம் சொல்கிறது.
முகப்புத்தகத்தின் புதிய தேடல் வசதியை பொறுத்திருந்து பார்ப்பம். மேலும் இந்த தேடல் குறித்து அறிந்துகொள்ள கீழ் இணைப்பை சொடுக்கவும்.
https://www.facebook.com/about/graphsearch






