பாலுடன் இவற்றை சேர்த்துச் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும்

பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.

மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, இரத்தம் கெட்டுப்போய் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான இரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால் உடலில் சளி அதிகம் தேங்கும்.தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிக புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.

கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச் செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Add Comment