மழைக் காலம் ஆரம்பமாகினாலே சிலருக்கு சளி சம்பந்தப்பட்ட வருத்தங்களும் உண்டாகிவிடும். இச் சளித்தொல்லையை சரி செய்ய இதோ சில மருத்துவக் குறிப்புகள்;
#மிளகைத் தூளாக்கி உப்புடன் கலந்து சாப்பிடசளித்தொல்லை நீங்கும்.
#மிளகுத் தூளை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்.
#தேன் மற்றும் இஞ்சிச்சாறு சம அளவில் கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
#தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆறிய பின் நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
#கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
#தூதுவளையினை துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
#மழைக் காலத்திலும் பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் தடிமல் வராது.
#வெங்காயம் சளியை முறிக்கும். பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
#சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் குடிப்பது நன்று. அதில் உயிர்ச்சத்து ‘C’ இருக்கிறது. உயிர்ச்சத்து ‘C’ தடிமலை தடுக்கும்.
#துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
#நன்றாக சளி பிடித்து மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூளாக்கி தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகும்.






