40 வயது ஆகும் போது எலும்புகள் பலவீனமாகலாம். அதை தவிர்க்க, எலும்பு ஆரோக்கியத்துக்கு கால்சியம் சப்ளிமெண்ட் எடுக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. நீங்களும் கால்சியம் சப்ளிமெண்ட் எடுத்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது. கால்சியம் நிறைந்த இந்த 5 உணவுகளை சேர்த்து வந்தால் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். எலும்பு உறுதியாக இருக்க கால்சியம் நிறைந்த 5 உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்,
உடலை உறுதி செய்வது எலும்பு தான். அதனால் எல்லா வயதிலும் எலும்பு ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் 40 வயதிற்குப் பிறகு எலும்பின் அடர்த்தி பொதுவாகவே குறையும், எலும்புகள் பலவீனமடையும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு இருப்பவர்கள் எலும்பு வலுப்படுத்த விரும்பினால் நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை தொடர்ந்து தெரிந்துகொள்வோம்.
கேழ்வரகு, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, எள்ளு, கசகசா எளிதாக கிடைக்கும் இந்த பாரம்பரிய உணவுகள் கால்சியம் வலுப்படுத்த செய்யும் என்னும் போது அதை அடிக்கடி சேர்த்து வருவது நல்லதுதானே.
எலும்புகளை வலுப்படுத்த தினசரி உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். புகைப்பழக்கம் எலும்புகளில் பாதிப்பை உண்டு செய்யும் என்பதால் தவிர்ப்பதே நல்லது. உடல் எடையை நிர்வகிப்பது எலும்பு ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். மருத்துவர் கால்சியம் குறைபாடை சரி செய்ய கால்சியம் மற்றும் வைட்டமின் D போன்ற எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவும் சப்ளிமெண்ட் பரிந்துரைத்தால் தவிர்க்க வேண்டாம்.






