தூக்கம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்று. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது மிகவும் நல்லது. அப்படி தூங்கும் போது எந்த திசையில் தலை வைக்க வேண்டும் ? என்று சில விதிமுறைகள் உள்ளன.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது. இதற்கு அறிவியல் பூர்வமாகவும் சான்றுகள் உள்ளன.வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும்.இதனால் இதய கோளாறுகள்,நரம்புத் தளர்ச்சி உண்டாகும்.மூளை பாதிப்படையும்.






