சூரியனுக்கே சவால் விடும்
சுறுசுறுப்பானவன் உழைப்பாளி
சுதந்திரம் இல்லா நாளிலும்…..
வேலைக்காய் சுற்றித் திரிபவன்…
இக்காலத்தில் எங்கு பார்க்கிறோம் உழைப்பாளியை…
விடிந்ததும் பல் துளக்கி குழிப்பது முதல்…
இரவில் தூங்கும் வரை எல்லா இயந்திரமயம்…
எங்கு காணலாம் உழைப்பை….
மாணவனுக்கு அறிவுக்கு வேலையில்லை…
அவன் கணக்கை கணிபொறி பார்க்கிறது…
கையிற்க்கு எழுதும் வேலையில்
அதை கணணி தனதாக்கிவிட்டது…
ஓடுவதற்கு கால்களுக்ககு வேலையில்லை…
கையடக்கதொலைபேசியில்
விளையாட்டுக்கு மதிப்பின்றி வலம் வருகிறது…
மனிதனை இயந்திரமாக்கி இயந்திரம்
மனிதன் வேலையை பார்க்கிறது…
இங்கு எங்கு தேடுவோம் உழைப்பாளியை…
தைப்பதும் துணியை வெட்டுவதும்
கணணியில் நான்கு காரியங்கள் செய்வதை
உழைப்பென்று எண்ணி ஏமாந்து போகிறது ஓர் கூட்டம்…
உழைப்பு அருகி மருகி காணாமல் போய்
பலகாலமாகிவிட்டது இந்த பூமியில்
சோம்பேரிகளை உருவாக்க துளிர்விட்டெழுந்ததுதான் இந்த நாகரிகம்…
அதை தலையில் வைத்தலைகிறது
பல தரித்திரங்கள்…
யார் உழைப்பாளி…
நாம் மறந்த நம் மூதாதையரே உழைப்பாளி…
சூரியனுக்கு முன் எழுவார்கள்
சூரியனை விட வேகமாய் செய்ற்பபடுவார்கள்…
உழைப்பு அவர்கள் சின்னம்…
உழைப்பாளி அவர்கள் பட்டம்…
தன்திறன் கொண்டு வாழ்ந்தவர்கள்…
எப்போது நாம் உழைப்பாளியாகுவோம்..
என்பது நம் வாழ்விற்கு எட்டாத ஒன்றே….
பா.க்ரிஷானி
அவிசாவளை








சிறந்த கருத்தாடலும் முற்போக்குச் சிந்தனையும் உழைப்பாளிகள் இருக்கிறார்கள் இல்லாமலில்லை
நவீன தொழில்நுட்பம் இல்லாத நாடுகளும் நாய்படாத பாடுபடும் தொழிலாளர்களும் இல்லாமல் இல்லை